மாட்டைச் சின்னமாக்கி நடக்கும் அறப்போராட்டமும் வெல்லும் என்று உலக நாயகன் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார். 

இன்று மாலை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. 

ஜல்லிக்கட்டுத் தொடர்பாக அவசர சட்டத்துக்கு உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 

நடிகர் ராகவா லாரன்ஸ் உடல் நிலை குறைவால் அசோக்நகரில் உள்ள பல்லவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டு வழக்கில் ஒருவாரத்தில் தீர்ப்பு வழங்க கூடாது என்கிற மத்திய அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. 

வாடிவாசலில் காளைகள் சீறிப்பாயும் வரை போராட்டம் தொடரும் என்று தமிழக இளைஞர்கள் அறிவித்துள்ளனர். 

More Articles ...

Most Read