திமுக வலிமையுடன் நிலைத்திருப்பதற்கு காரணம் திமுக தலைவர் கருணாநிதியின்
உறுதிமிக்க நிலைப்பாடு என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்
கூறியுள்ளார்.

மாட்டிறைச்சிக்கான தடை என்பது மாநில உரிமைகளில் தலையிடுவதாக உள்ளது
என்றும் இது தொடர்பான சட்டத்தை கேரள அரசு ஏற்காது என்றும் பிரதமர்
நரேந்திர மோடிக்கு அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம்
எழுதியுள்ளார்.

மாட்டிறைச்சி விற்பனை தொடர்பான அரசாணைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள
நிலையில்,அரசாணையில் உள்ள விலங்குகள் பட்டியலிலிருந்து எருமை மாட்டை
மட்டும் நீக்குவதற்கு மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

மாட்டிறைச்சி விற்பனை தொடர்பான மத்திய அரசின் அரசாணை அரசியலமைப்புக்கு
எதிரானது என்று மம்தா பானர்ஜி குற்றச்சாட்டி உள்ளார்.

அணைகளில் இருந்து தூர் வாரப்படும் வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக அள்ளி
செல்லலாம் என முதலமைச்சர் அனுமதி வழங்கியுள்ளார்.

மகாத்மா காந்தி கொலையில் மற்றொரு நபருக்கு தொடர்பு உள்ளது என்று உச்ச
நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

ஸ்கூல் செலவுகள் இந்தாண்டு அதிகரிக்கும், நோட்டு விலை 25%
உயர்வதந்துள்ளது என்று தெரிய வருகிறது.

More Articles ...

Most Read