மத்திய மாநில அரசுகளே மானம் ரோஷம் இருந்தால் திருமுருகன் காந்தியை விடுதலை செய்யுங்கள் என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். 

மோடி அதிக பலத்துடன் மீண்டும் ஆட்சியை பிடிப்பார் என்று கருத்து கணிப்பில் தகவல் தெரிய வந்துள்ளது.

சென்னை விமான பயணிகளின் கைப்பைகளுக்கு பாதுகாப்பு சோதனை முத்திரை
குத்தும் வழக்கம் கைவிடப்படுகிறது என்று சிஐஎஸ்எப் அறிவித்துள்ளது.

போக்குவரத்து ஊழியர்களின் நிலுவைத் தொகை தொடர்பான வழக்கு சென்னை உயர்
நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்
பிறப்பித்துள்ளது.

தரம் குறைவான பால் மூலம் பாதிப்பு ஏற்படுவதில்லை, கலப்பட பாலினால் தான்
பாதிப்பு ஏற்படுகிறது என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
கூறியுள்ளார்.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசியின் 68 சொத்துக்களை பறிமுதல் செய்ய
உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை கேளம்பாக்கம் அருகே மாம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய
திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், திமுக தலைவர் கருணாநிதி வைரவிழாவில்
பங்கேற்பது கடினம் என்று கூறியுள்ளார்.

More Articles ...

Most Read