“திவாகரனால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. அவர், எங்களது கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு தம்பி என்பதை தவிர கட்சியில் வேறு எந்தவித தொடர்பும், அடையாளமும் இல்லை. திவாகரனுடைய கருத்துகள் எங்கள் கட்சியில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. உறவு வேறு, கட்சி வேறு. திவாகரனுக்கும் அ.ம.மு.க.வுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது.“ என்று அ.ம.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். 

Read more: திவாகரனால் என்னை ஒன்றும் செய்ய முடியாது: டி.டி.வி.தினகரன்

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அவசர நிலை ஆட்சியைவிட, பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய ஆட்சி மிக மோசமானது என்று பா.ஜ.க.லிருந்து விலகிய முன்னாள் மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். 

Read more: இந்திராவின் அவசர கால ஆட்சியைவிட மோடியின் ஆட்சி மோசமானது: யஷ்வந்த் சின்ஹா

தி.மு.க. செயல் தலைவரான மு.க.ஸ்டாலினால் இனி ஒருபோது முதலமைச்சராக முடியாது என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

Read more: ஸ்டாலினால் இனி ஒருபோதும் முதலமைச்சராக முடியாது: விஜயகாந்த்

2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைக்கிறதா? என்பதற்கு, தேர்தல் வரும்போது முடிவு தெரியும் என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

Read more: பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி; தேர்தல் நேரத்தில் முடிவு என்று ஜெயக்குமார் அறிவிப்பு!

பாராளுமன்றம் போன்ற உயர் சபைகளிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் இடம்பெறுவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரேணுகா சவுத்ரி குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: பாராளுமன்றத்திலும் பெண்களுக்கு எதிராக பாலியல் அத்துமீறல்கள் தொடர்கின்றன; ரேணுகா சவுத்ரி குற்றச்சாட்டு!

மக்கள் நலனில் எந்தவித அக்கறையும் இன்றி அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் இணைந்து செயல்பட்டு வருவதாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். 

Read more: மக்கள் நலனில் அக்கறையின்றி அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் இணைந்து செயற்படுகின்றன: மு.க.ஸ்டாலின்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கக்கோரி எதிர்க்கட்சிகள் அளித்த பிரேரணை, குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. 

Read more: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கக் கோரும் தீர்மானம் நிராகரிப்பு!

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்