ஆளுநர் நடவடிக்கைகள் அனைத்தும் அரசியல் சாசன சட்டப்படி நடக்கறது என்றால், பெரும்பான்மையை இல்லாத எடப்பாடி பழனிசாமி அரசுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க அழைப்பு விடுக்காதது ஏன் என்று மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார். 

‘ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். குற்றவாளிகள் நாடாளக்கூடாது.’ என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

உலக அழகிப் போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் பட்டம் வென்றுள்ளார். 17 ஆண்டுக்குப் பிறகு இப்பட்டம் வெல்லும் இந்திய அழகி என்ற இடத்தை அவர் பெற்றுள்ளார். 

மறைந்த ஜெயலலிதா ஜெயராமின் சென்னை போயஸ் தோட்டம் இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று திங்கட்கிழமை டெல்லியில் கூடுகிறது. இதில், காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியை தேர்ந்தெடுப்பதற்கான திகதி முடிவு செய்யப்படுகிறது. 

கட்சிக்கும் ஆட்சிக்கும் விசுவாசமாக இருந்ததால்தான் முதல்வர் பொறுப்புக்கு தான் வந்துள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

போலி ஆவணங்கள் மூலம் சொகுசு கார் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் சசிகலாவின் கணவர் எம்.நடராஜன், சகோதரி மகன் வி.என்.பாஸ்கரன் உள்ளிட்ட 4 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, உச்சநீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்தது. 

More Articles ...

Most Read