மும்பை எல்பின்ஸ்டோன் புறநகர் ரயில் நிலையத்தில் மின்சாரம் கசிந்ததாக வதந்தி பரவியதால், மக்கள் ஓட முயன்ற போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் பலியாயினர். 20 பேர் காயமுற்றனர். 

பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா மற்றும் தற்போதையை நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோருக்கிடையில் ஏற்பட்டுள்ள மோதல் நிலையால், பா.ஜ.க. கவலையடைந்துள்ளது. 

நடிகர் சிவாஜி கணேசனின் மணி மண்டப திறப்பு விழாவில், தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் பங்கேற்காதது சிவாஜி குடும்பத்தினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 

‘வி.கே.சசிகலா குடும்பத்திடம் 20,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்துக்கள் உண்டு. அவர்கள், திருடியதற்காகவே சிறை சென்றவர்கள்’ என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல், மரணம் அடைந்தது வரை விசாரணை நடத்தி 3 மாதத்தில் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு நேற்றிரவு அரசாணை வெளியிட்டது. 

தமிழகத்தின் அனைத்து சிறப்பு காவல் படையும் தயார் நிலையில் இருக்க டிஜிபி ராஜேந்திரன் திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

More Articles ...

Most Read