ஜல்லிக்கட்டு நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.1000 கோடி உடனடியாக வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் தமிழக அரசு மனு கொடுத்துள்ளது.  

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி 15 மணிநேரமாக போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் வாடிவாசல் பகுதியை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.இதை ஏற்க இளைஞர்கள் மறுப்பதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

போயஸ் தோட்டத்துல பூப்பறிச்சிட்டிருக்கீங்களா?:அதிமுக மீது டி.ஆர். ஆவேசத் தாக்குதல் தொடுத்துள்ளார். 

பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என மத்திய அரசை தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஜல்லிக்கட்டுத் தடைக்கான தமது எதிர்ப்பினை வெளியிட்டு அலங்காநல்லூரில் இன்று திங்கட்கிழமை காலை திரண்ட பொதுமக்கள் காளைகளை அவிழ்த்து விட்டனர். சில காளைகள் தடையை மீறிப் பாய்ந்தன. 

தொல் பழங்கால நாகரிகம் கொண்ட தமிழர்கள் தங்களின் பண்பாட்டுத் திருவிழாவாக ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகக் கொண்டாடி மகிழும் திருநாள்தான் தைப் பொங்கல் ஆகும். 

More Articles ...

Most Read