சென்னை காமராஜர் சாலையில் முதல்வர் செல்லும் பாதையில் நின்ற போக்குவரத்து பெண் காவலர் மீது கல்லூரி மாணவர் மோட்டார் சைக்கிளில் மோதியதில் படுகாயமடைந்த பெண் காவலர் கைகால்களில் எலும்பு முறிவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெண்கள், ஆண்கள் மட்டும் நுழையும் கோயிலுக்கு செல்வதைக் காட்டிலும் மருத்துவ, அறிவியல் கல்லூரிகளுக்கு செல்வது நல்லது என்று உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ள கருத்துக்கள் சர்ச்சியைக் கிளப்பி உள்ளன. 

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம், தமிழகத்தில் இதுவரை 25 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு உள்ளது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார். 

சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டும் பணிகளைத் துவக்கியதாகத்  தகவல்கள் வெளியாகி உள்ளன. 

தமது அமைச்சரவையில் இருந்த சந்தீப் குமாரை பதவி நீக்கம் செய்த பின்னர், பொதுவாழ்வில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கும் விவகாரத்தில் சமரசம் கிடையாது என்று டெல்லி  முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். 

தமிழக ஆளுநர் ரோசையாவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அவர்  பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். 

More Articles ...

Most Read