டெங்கு காய்ச்சலால் தமிழகத்தில் இதுவரை 400 பேர் உயிரிழந்துள்ளதாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

வரும் 2018ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்திற்குள் பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த முடியும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

நடராஜனைப் பார்க்க 15 நாள் பரோல் கேட்ட, வி.கே.சசிகலாவின் கோரிக்கையை பெங்களூர் சிறைத்துறை நிராகரித்து உத்தரவிட்டது. 

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, அமேதி தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என்று மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. 

நடிகர் கமல்ஹாசன், சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள தனது இல்லத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ‘திடீர்’ ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார். 

நடிகை ஒருவரை கடத்தி பாலியல் கொடுமை செய்த வழக்கில் நடிகர் திலீபுக்கு கேரள உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. 

உத்தரப்பிரதேசத்தின் சுற்றுலாத் தலங்களுக்கான பட்டியலில் இருந்து தாஜ்மஹால் நீக்கப்பட்டுள்ளது. 

More Articles ...

Most Read