தமிழகத்தின் ஆட்சியை கலைக்க வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுனர் வித்யாசாகரிடம் மறுபடியும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று கேரள மாநிலத் தலைநகர் கொச்சியில் மெட்ரோ ரயில் நிலையத்தை திறந்து வைத்தார். அதோடு பளாரிவட்டத்திலிருந்து, பாதடிப்பளம் வரை, கேரள ஆளுனர், முதல்வர், யூனியன் மினிஸ்டர் ஆகியோருடன் பயணமும் மேற்கொண்டார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை பாரதிய ஜனதாக் கட்சியின் குழு சந்தித்துப் பேசியுள்ளது. எனினும், இந்தச் சந்திப்பில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. 

இறைச்சிக்காக மாடுகளை விற்க விதித்த தடை உத்தரவை மறு ஆய்வு செய்ய தயாராக இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

காஷ்மீர் பள்ளத்தாக்கில் நேற்று வெள்ளிக் கிழமை முதல் பதற்ற சூழ்நிலை தொடர்கிறது. நேற்று லஷ்கரி இ-தொய்பா அமைப்பின் கிளர்ச்சியாளர்களுக்கும், இந்திய காவல்துறையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் மூன்று கிளர்ச்சியாளர்களும், இரு பொதுமக்களும், 8 காவல்துறையினரும், ஒரு இராணுவ வீரரும் கொல்லப்பட்டுள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த தன்னுடைய அடுத்த பிறந்த நாளின் போது புதிய கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என்று ரசிகர்கள் மத்தியில் பரபரப்பான எதிர்பார்ப்புத் தோன்றியுள்ளது. 

காஷ்மீரில், பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு வாழ்வாதாரம் அளித்து வருவதாக இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. 

More Articles ...

Most Read