வேண்டும் வேண்டும் ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என்று திமுக உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கம் எழுப்பி வருகின்றனர். 

எதிர்க்கட்சிகள் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களின் ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என்கிற கோரிக்கையை புறக்கணித்தார் சபாநாயகர் தனபால். 

ரகசிய வாக்கெடுப்பே உண்மையான ஜனநாயகத்துக்கு வழி வகுக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேரவையில் பேசி வருகிறார். 

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை ஜாமீனில் எடுப்பது குறித்து வழக்கறிஞர்கள் சிறையில் சசியை சந்தித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. 

ரகசிய வாக்கெடுப்பு நிகழ்த்த வேண்டும் என்று திமுக மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகள், பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அமளியில் ஈடுபட்டு உள்ளனர். 

அதிமுக விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே சசிகலா தரப்புக்கு சாதகமாகவே பேசி நடந்து வருகிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். 

More Articles ...

Most Read