இந்தியா
Typography

“சீனா வலிமையான நாடாக இருக்கலாம். ஆனால், இந்தியா பலவீனமான நாடு இல்லை. சீனாவை எதிர்கொள்ளும் திறனுடனேயே இருக்கின்றோம்.” என்று இந்திய இராணுவத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். 

டெல்லியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இராணுவத் தளபதி கலந்து கொண்டார். அப்போது, அவர் செய்தியாளர்களிடமும் பேசினார்.

அதன்போது அவர் தெரிவித்துள்ளதாவது, “இந்திய மண்ணை யாரும் ஆக்கிரமிக்க முடியாது. சீனா வலிமையான நாடாக இருக்கலாம். அதே வேளையில் இந்தியா பலவீனமான நாடு இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சீனாவை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். தேசத்தின் வடக்கு எல்லை மீது கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது.

இந்திய எல்லையை ஆக்கிரமிக்க சீனா கடும் முயற்சி மேற்கொண்டுள்ளது. ஆனால், சீனாவின் முயற்சி தொடர்ந்து முறியடிக்கப்படும். சீனாவை எதிர்கொள்ளும் திறன் நமக்கு முழுமையாக இருக்கிறது. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை குறித்த பாதிப்பை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்