இந்தியா
Typography

“அம்மாவின் ஆட்சி என பொய் கூறும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியாளர்கள், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை புகழ்வது போன்று நடித்துவிட்டு, மத்திய பா.ஜ.க. அரசிடம் கைகட்டி சேவகம் செய்கின்றனர்.” என்று டி.டி.வி.தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் மீதான விவாதத்தின் போது தினகரனுக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அவர் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “ஜெயலலிதாவின் ஆட்சி என பொய் கூறும் ஆட்சியாளர்கள், ஜெயலலிதாவை புகழ்வது போன்று நடித்துவிட்டு, மத்திய பாஜக அரசிடம் கைகட்டி சேவகம் செய்கின்றனர்.

சபையின் நாயகராக நடுநிலையோடு செயல்பட வேண்டிய சபாநாயகர், அவ்வாறு செயல்படுகின்றாரா என்ற கேள்வி எழுகிறது. ஆளுநர் உரையில் உள்ள குறைகளை சுட்டிக்காட்ட முயன்றேன். ஆனால், எனக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டுவிட்டது. நாளை முதல்வர் பழனிசாமிதான் பேசுவார். எனவே நான் பேசினால், இன்று மட்டுமே பேசமுடியும் என்ற சூழலில் எனக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு விட்டது. நேற்று வரை வாய்ப்பளிப்பதாக கூறிவிட்டு இன்று அனுமதி மறுப்பு.சபாநாயகர் தனபால் நடுநிலையுடன் நடந்து கொள்ளவில்லை.” என்றுள்ளார்.

Most Read