இந்தியா
Typography

“அ.தி.மு.கவில் பங்காளிச் சண்டை உச்சத்தில் உள்ளது. விரைவில் ஒவ்வொன்றாக வெளியே வரும்” என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த டி.டி.வி.தினகரன் ஊடகங்களிடம் பேசும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருந்தவரைதான் இரட்டை இலைக்கு மரியாதை இருந்தது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதுசூதனன் தோற்றதற்கு அமைச்சர் ஜெயக்குமார் தான் காரணம். ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் மதுசூதனன் தோல்விக்கு காரணம். அ.தி.மு.கவில் பங்காளிச் சண்டை உச்சத்தில் உள்ளது. விரைவில் ஒவ்வொன்றாக வெளியே வரும்” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்