இந்தியா
Typography

கட்சிக்கான பெயர் அறிவிப்பு தற்போதைக்கு இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

கட்சி ஆரம்பித்து அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக கடந்த வருடத்தின் இறுதி நாளில் ரஜினிகாந்த அறிவித்திருந்தார்.

ஆனால், கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவை இதுவரை அறிவிக்கவில்லை. இதற்காக ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன், ரஜினிகாந்த் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் தனது ரசிகர் மன்றத்தின் பெயரையும், மக்கள் மன்றம் என மாற்றினார்.

இந்நிலையில், கடந்த 6ஆம் தேதி மலேசியாவில் நடந்த நட்சத்திர கலை விழாவில், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த விழா முடிந்ததும் கமல்ஹாசன், நேற்று முன்தினம் மதியம் சென்னை வந்தார்.

இதைதொடர்ந்து ரஜினிகாந்த், சூர்யா ஆகியோர் நேற்று முன்தினம் நள்ளிரவு 11.50 மணிக்கு கோலாலம்பூரில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினர். அப்போது, சென்னை விமான நிலையத்தில், ரஜினிகாந்த்தை சூழ்ந்து கொண்ட நிருபர்கள், அவரிடம் பேட்டி எடுக்க முயன்றனர். ஆனால், அவர் பேட்டி எதுவும் கொடுக்காமல், காரை நோக்கி நடந்து சென்றார்.

அவரிடம், ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் என நிருபர்கள் கூறினர். இதையடுத்து, உங்களது புதிய கட்சியின் பெயரை எப்போது அறிவிப்பீர்கள்? என கேள்வி எழுப்பினர். அதற்கு, “இப்போதைக்கு இல்லை” என ஒரே வார்த்தையில் கூறிய ரஜினிகாந்த், வேறு எதுவும் பேசாமல் காரில் புறப்பட்டு சென்றார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்