இந்தியா
Typography

தமிழக மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கச்சதீவை மீட்பதே ஒரே வழி என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டமன்றத்தில் இன்று காலை ஆளுநர் உரையாற்றினார். அதன்போதே, மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மீனவர் பிரச்சினை தீர கச்சத்தீவை மீட்பதே நிரந்தரத் தீர்வு. தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் ஓரளவு குறைந்துள்ளது. ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு மத்திய அரசு உதவியுடன் ரூ.200 கோடி ஒதுக்கப்படும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்