இந்தியா
Typography

பெரும்பான்மை இல்லாத அரசை அங்கீகரிக்கும் வகையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் சட்டமன்றத்தில் உரையாற்றியது தவறு என்று சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். 

மத்திய அரசை பார்த்தாலே தமிழக அரசு நடுங்குகிறது. நடுங்கும் தமிழக அரசால் மத்திய அரசிடம் இருந்து எப்படி நிதி பெற முடியும் என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

தமிழக சட்டமன்றம் இன்று காலை ஆளுநர் உரையுடன் கூடியது. ஆளுநர் உரைக்குப் பின்னர் ஊடகங்களுக்கு பேட்டியளிக்கும் போதே டி.டி.வி.தினகரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஆளுநர் உரையில் விவசாயிகளின் எந்த பிரச்சனைகள் குறித்து குறிப்பிடவில்லை. அதேபோல், காவிரி மேலாண்மை வாரியம் பற்றி ஆளுநர் உரையில் எந்த குறிப்பும் இல்லை.

ஓகி புயல் சேதத்தை தேசிய பேரழிவாக அறிவிக்க ஆளுநர் உரை வலியுறுத்தவில்லை. ஆளுநர் உரை சம்பிரதாயம் போல இருந்தது. ஓகி புயலால் காணாமல் மீனவர்களை சரியாக தேடவில்லை. போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வூதியம் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை.” என்றுள்ளார்.

Most Read