இந்தியா
Typography

தமிழக முதல்வராக இருந்து கடந்த ஆண்டு மறைந்த ஜெயலலிதா ஜெயராமின் முதலாமாண்டு நினைவுதினம் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுஷ்டிக்கப்படுகின்றது. 

சென்னை மெரீனா கடற்கரையிலுள்ள அவரது நினைவிடத்தில், ஆயிரக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி சென்னை, ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 75 நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி 2016ஆம் ஆண்டு டிசம்பர் 05ம் தேதி இரவு மரணம் அடைந்தார்.

 

Most Read