இந்தியா
Typography

நாட்டு மக்களை முட்டாளாக்குவதில் பா.ஜ.க கைதேர்ந்த கட்சி என்று உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். 

சமாஜ்வாதி கட்சியின் மாநில மாநாடு மேற்குவங்க மாநிலத்தில் நடந்தது. இதில் கலந்து கொள்ள மேற்குவங்கம் அகிலேஷ் கோல்கட்டா வந்தார்.

அப்போது, அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, “பா.ஜ.க.விற்கு எதிராக மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்று திரள வேண்டும். 2019 பாராளுமன்ற மக்களைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி மிகப்பெரிய சக்தியாக வளரும். மக்களை முட்டாளாக்குவதில் பா.ஜ.க. ஒரு கைதேர்ந்த கட்சி.” என்றுள்ளார்.

முன்னதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை அகிலேஷ் சந்தித்தார். அப்போது அவர் கூறியது, “ஒவ்வொரு முறையும் நான் கோல்கட்டா வந்தால் நிச்சயம் மம்தா பானர்ஜியை சந்திப்பேன். பா.ஜ.க.வை எதிர்க்கும் திரிணாமுல் கட்சிக்கு சமாஜ்வாதி என்றும் ஆதரவு தரும்” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்