இந்தியா
Typography

“அ.தி.மு.க.வுக்கு பா.ஜ.க. ஒரு பொருட்டே அல்ல. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெறுவதற்கு எங்களது வாங்கு வங்கியே போதுமானது.” என்று அ.தி.மு.க.வின் மக்களவை உறுப்பினரான மைத்ரேயன் தெரிவித்துள்ளார். 

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் இ.மதுசூதனனை, தண்டையார்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் மைத்ரேயன் சந்தித்தார். தேர்தல் பிரசாரம் மற்றும் களப்பணி குறித்து ஆலோசித்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, “ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. தேர்தல் என்று வந்தால் அ.தி.மு.க.வினர் ஒன்றுபட்டு எங்கள் ஒற்றுமையை காட்டுவோம். அ.தி.மு.க. கொடியை பயன்படுத்த தனக்கு தகுதி இல்லை என்று தெரிந்துதான், டி.டி.வி.தினகரன் அண்ணா படம் இல்லாத கொடியை பயன்படுத்தி இருக்கிறார். இந்த இடைத்தேர்தல் நியாயமாக நடக்க தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும்.

பா.ஜ.க. போட்டியிடுவது அ.தி.மு.க.வுக்கு பலமா? பலவீனமா? என்று கேட்கிறார்கள். அ.தி.மு.க. வெற்றி பெற எங்களுக்கு உள்ள வாக்கு வங்கியே போதுமானது. இந்த விவகாரத்தில் அ.தி.மு.க.வுக்கு, பா.ஜ.க. ஒரு பொருட்டே கிடையாது. எனவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மதுசூதனன் வாகை சூடுவார் என்பதில் சந்தேகமே இல்லை.” என்றுள்ளார்.

Most Read