இந்தியா
Typography

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தியால் இனி உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் வெற்றிபெற முடியாது என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 

உத்தரப் பிரதேச உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று 14 மாநகராட்சிகளை கைப்பற்றியது. இதில் ராகுல் காந்தியின் மக்களைவைத் தொகுதியான அமேதியில் காங்கிரஸ் படு தோல்வியடைந்தது.

இது குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியது, “உ.பி.உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.வின் வெற்றி பிரதமர் மோடியின் தொலை நோக்குதிட்டங்களுக்கு கிடைத்தது. ராகுலின் அமேதி தொகுதியில் காங். கட்சி படு தோல்வியடைந்துள்ளதன் மூலம், தோல்வியில் இருந்து ராகுல் பாடம் கற்றுகொள்ள வேண்டும். இனி ராகுலுக்கு அரசியல் எதிர்காலம் இல்லை. ராகுலால் அமேதி தொகுதியை கூட காப்பாற்ற முடியாது. வருங்காலத்தை பற்றி சிந்திக்க வேண்டியிருக்கும்.” என்றுள்ளார்.

Most Read