இந்தியா
Typography

பாகிஸ்தான் பழிவாங்கும் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துள்ள போதிலும், இந்தியா அதனைத் தோற்கடித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

ஜம்மு-காஷ்மீரில் தற்போது நிலைமை முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “பாகிஸ்தானின் தாக்குதலை நம்முடைய இராணுவம், ஜம்மு- காஷ்மீர் மாநில போலீசார் மற்றும் உளவுத்துறை ஆகியவற்றை மூலம் முறியடிக்கப்படுகிறது. தற்போது காஷ்மீரில் பயங்கரவாத தொடர்புடைய சம்பவங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. மேலும் 2022க்குள் நக்சலைட்கள் அகற்றப்படுவார்கள். சர்வதேச அளவில் இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. சக்தி வாய்ந்த நாடுகளின் வரிசையில் இந்தியா உள்ளது. அனைத்து இடங்களிலும் இந்தியாவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்