இந்தியா
Typography

இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் தலையீடுகள் குறித்து, இந்திய கடலோரக் காவல் படை கவலை கொள்ளவில்லை என்று இந்திய கடலோரக் காவல் படையின் பணிப்பாளர் ராஜேந்திர சிங் தெரிவித்துள்ளார். 

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா 99 வருட குத்தகைக்கு பெற்றுக்கொண்டிருப்பது, இந்தியாவுக்கு என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என இந்திய கடலோரக் காவல் படையின் பணிப்பாளர் ராஜேந்திர சிங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, “நாம் இலங்கையுடன் புரிந்துணர்வு உடன்பாடு செய்திருக்கிறோம். சீனாவின் தலையீடுகளால் எமது உறவுகளில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.” என்று பதிலளித்துள்ளார்.

Most Read