இந்தியா
Typography

அவுஸ்திரேலியக் கிரிக்கெட் அணி பயணித்த பேருந்து மீது கவுகாத்தியில் நேற்று செவ்வாய்க்கிழமை கல் வீச்சு நடத்தப்பட்டுள்ளது. 

அவுஸ்திரேலியக் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ராஞ்சியில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று கவுகாத்தியில் நடைபெற்ற இரண்டாவது இருபதுக்கு20 போட்டியில் இந்திய அணியின் சொதப்பலாக ஆடியதால், அவுஸ்திரேலியா எளிதாக வென்றது. இந்த போட்டி முடிந்ததும் அவுஸ்திரேலிய அணி வீரர்கள், அவர்கள் தங்கியிருந்த விடுதிக்கு பேருந்து ஒன்றில் சென்றனர்.

அப்போது அந்த பேருந்து மீது மர்ம நபர்கள் சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இந்தனால், பேருந்தின் கண்ணாடி உடைந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அந்நாட்டு வீரர்கள் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவத்தை அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பின்ச் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார்.

 

Most Read