இந்தியா
Typography

அயோத்தியில் 328 அடியில் இராமர் சிலை அமைக்க உத்திரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது. 

இதனை அம்மாநில ஆளுநர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இராமர் சிலையானது அயோத்தியில் உள்ள சார்யு ஆற்றின் கரையில் 100 மீட்டர் உயரத்தில் அமைக்க உத்திரப் பிரதேச மாநில சுற்றுலாத்துறை பரிந்துரை செய்துள்ளது.

இந்த திட்டத்தை குறித்து பேசிய அம்மாநில சுற்றுலாத்துறை செயலாளர் அவனிஷ் குமார் அவஸ்தி, இராமர் சிலை அமைப்பது குறித்து பரிந்துரை தான் செய்யப்பட்டுள்ளது, முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Most Read