இந்தியா
Typography

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அவசர கோலத்தில் ஜிஎஸ்டியை அமுல்படுத்தியதால் 30 இலட்சம் பேர் வேலையை இழந்துள்ளனர் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

“ஜிஎஸ்டியால் வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கரன்சி வாபஸ் நடவடிக்கையால் மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிந்து விட்டது. இதனால் எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாஜ ஆளும் மாநிலங்களில் தான் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துள்ளது.“ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இமாச்சல பிரதேசத்தில் முதல்வர் வீரபத்ரசிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. வீரபத்ர சிங் அங்கு 6 முறை முதல்வராக பதவி வகித்து வருகிறார். அங்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் வர இருக்கிறது. எனவே இம்முறை எப்படியும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என பா.ஜ.க தீவிரம் காட்டி வருகிறது. அதே நேரத்தில் 7வது முறையாக முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொள்ள வீரபத்ர சிங் தலைமையில் காங்கிரஸ் கட்சியும் வேகம் காட்டி வருகிறது.

இதையடுத்து, இமாச்சல பிரதேசத்தில் ராகுல் பிரசார சுற்றுபயணம் செய்து வருகிறார். மாண்டியில் உள்ள பாத்தல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் ராகுல் பேசினார். அதன்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

Most Read