இந்தியா
Typography

வரும் தேர்தல்களில் அ.தி.மு.க. முழுவதுமாக தோல்வியை சந்திக்கும் என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க தனித்தே போட்டியிடும் என்றார். தற்போது தமிழக அரசு கையாலாகாத அரசாகவும், மத்திய அரசுக்கு அடிபணிந்தும் செல்கிறது என்று தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அதிமுகவின் இரட்டை இலை பிரச்சனை தீரும் வரை உள்ளாட்சி தேர்தலை நடத்த மாட்டார்கள், தமிழகத்தில் ஜனநாயக முறைப்படி ஆட்சி நடை பெறவில்லை. ஜனநாயகத்துக்கு எதிரான ஆட்சி நடைபெறுகிறது. அதிமுகவின் 19 எம்எல்ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றுள்ள நிலையில் தமிழக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டிருக்க வேண்டும். அப்படி செய்யாதது ஜனநாயகத்துக்கு எதிரான செயலாகும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்