இந்தியா
Typography

தமிழகத்தில் நடைபெறுவது அ.தி.மு.க. ஆட்சியல்ல. அது, பா.ஜ.க. ஆட்சியே என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

நீட் தேர்வுக்கு எதிராக சென்னை தாம்பரத்தில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், திருமாவளவன், முத்தரன், ஜி.ராமகிருஷ்ணன் உட்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பட்டன. இதேபோல் தமிழகம் முழுவதும் அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

நெருக்கடியில் இருந்து தமிழக மக்களை காப்பாற்ற அனைவரும் உறுதியேற்க வேண்டும் என தாம்பரத்தில் நடைபெறும் நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மருத்துவப்படிப்பு கனவு தகர்ந்த காரணத்தால் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். அனிதாவின் மரணம் தற்கொலையாக இருந்தாலும் அது நீட் தேர்வுக்காக நடந்த கொலை என ஸ்டாலின் கூறியுள்ளார்.

மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். மேலும் அனிதா மரணத்துக்கு காரணமான மத்திய, மாநில அரசுகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். தமிழகத்தில் நடைபெறுவது அதிமுக ஆட்சி அல்ல, பாஜக ஆட்சிதான் நடைபெறுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்