இந்தியா
Typography

இன்று கூடியது அ.தி.மு.க. பொதுக்குழு- செயற்குழு கூட்டம் அல்ல என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதன்போது, பொதுச் செயலாளர் பதவியிலிருந்து வி.கே.சசிகலா நீக்கப்பட்டார். அத்தோடு, கடந்த காலத்தில் சசிகலாவினால் நியமிக்கப்பட்ட பதவிகளும் செல்லாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் மதுரையில் ஊடகவியலாளர்களிடம் பேசிய டி.டி.வி தினகரன், “இன்று அவர்கள் கூட்டியது பொதுக்குழு கூட்டமல்ல; வெறும் கூட்டம். எந்த தீர்மானம் நிறைவேற்றினாலும், அதற்கு, சட்ட ரீதியான அங்கீகாரம் கிடையது என நீதிமன்றம் கூறியுள்ளது. அக்டோபர் 23இல் வழக்கு விசாரணைக்கு வரும்போது தீர்மானம் செல்லுமா செல்லாதா என நீதிமன்றம் சொல்லும் போது தெரியவரும். இந்த அரசை ஆட்சியை விட்டு அனுப்புவதற்கான பணியில் இறங்கிவிட்டேன் என்பதை நேற்றே கூறினேன். இன்றும் அதனை கூறுகிறேன். ஜெயலலிதா இடத்தில் வேறு யாரையும் பார்க்க முடியாது என சொன்னவர்கள் தான் சசிகலாவை அமர வைத்தவர்கள். ஜெயலலிதா இருந்த முதல்வர் இடத்தில், எடப்பாடியை பார்க்க விரும்பவில்லை. இதை செய்ய இறங்கி விட்டேன். ஜெயலலிதா இருந்த முதல்வர் சிம்மாசனத்தில் இவர்களை பார்க்க முடியாது என்பதுதான் மக்கள், தொண்டர்கள் விருப்பம்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்