இந்தியா
Typography

அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக வி.கே.சசிகலா நியமிக்கப்பட்டமை செல்லாது என்று அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

அத்தோடு, பொதுச்செயலாளர் என்கிற பதவியை மறைந்த ஜெயலலிதா ஜெயராமுக்கே நிரந்தரமாக ஒதுக்குவதாகவும், ஆகவே, இனி அந்தப் பதவி நடைமுறையில் கிடையாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. பொதுக்குழு- செயற்குழுக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகின்றது. அதிலேயே மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்தோடு, இரட்டை இலையை மீட்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்