இந்தியா
Typography

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை தமிழக ஆளுநரை சந்தித்தனர். இதன்போதே, மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் திரும்ப பெற்றனர். இதனால் அரசுக்கு போதிய சட்ட மன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லாததால், சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்குமாறு எடப்பாடி பழனிசாமி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல தரப்புக்களும் வலியுறுத்தி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

Most Read