இந்தியா
Typography

மூத்த வழக்கறிஞரான ராம் ஜெத்மலானி தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். தனது 70 ஆண்டு கால வழக்கறிஞர் பயணத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

இந்திய பார் கவுன்சில் சார்பாக, உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு டெல்லியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில், மூத்த வழக்கறிஞரான ராம் ஜெத்மலானி பங்கேற்று பேசினார்.

அப்போது அவர், “வழக்கறிஞர் தொழிலில் இருந்து, ஓய்வு பெற முடிவு எடுத்திருக்கிறேன். என் உயிர் உள்ளவரை, பொது வாழ்வில் இருப்பேன். அரசியலில் ஊழலை ஒழிப்பது, என் புதிய பணியாக இருக்கும். ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக, என் போராட்டத்தை தொடர்வேன். ஊழலை எதிர்க்கும் வழக்கறிஞர்களுக்கு, ஆலோசனையையும் வழங்குவேன். தற்போது, ஆளும் அரசாக இருக்கட்டும், இதற்கு முன் ஆண்ட அரசாக இருக்கட்டும், இவர்கள் நாட்டை ஒரு இக்கட்டான சூழலுக்கு தள்ளிவிட்டனர். இவர்களை எதிர்த்து போராட வழக்கறிஞர்களும், மக்களும் முன்வந்து நிற்கவேண்டும்”, என பேசி முடித்தார்.

Most Read