இந்தியா
Typography

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜனின் வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று சனிக்கிழமை சோதனை நடத்தினர். 

காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் ஜெயந்தி நடராஜன். இவர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் சுற்றுசூழல் துறை அமைச்சராக பதவி வகித்தவர். இவர் தற்போது தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி உள்ளார்.

இந்நிலையில் இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜெயந்தி நடராஜனின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதேபோல் ஜெயந்தி நடராஜனுக்கு சொந்தமான பிற பகுதிகளிலும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயந்தி நடராஜன் சுற்றுசூழல் அமைச்சராக இருந்த போது சுற்றுசூழல் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்ததற்கு இலஞ்சம் வாங்கியதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும் லோக்சபா தேர்தலின் போது 'ஜெயந்தி வரி' திட்டங்களால் வளர்ச்சி முடங்கியுள்ளது என்றும் மோடி விமர்சித்திருந்தார்.

இதனிடையே வெளிநாட்டு பணபரிவர்த்தனைகள் குறித்து சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடு அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தி வழக்கு பதிந்தது குறிபிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்