இந்தியா
Typography

‘நாட்டிற்கு ஊழியம் செய்வோரை கேலி செய்யாதே. மூப்பெய்தி மாளும் முன். சுதந்திரம் பழகு’ என்று நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார். 

கமல்ஹாசன் சமீப காலமாக டிவிட்டர் வாயிலாக சமூக அவலங்களையும், தமிழக அரசு குறித்தும் பரபரப்பான கருத்துகளை பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில், நேற்று வியாழக்கிழமை அவர் முரசொலி பவள விழாவில் பங்கேற்றார். இதன்பின், அவர் தனது டிவிட்டரில் “விம்மாமல் பம்மாமல், ஆவன செய். புரட்சியின் வித்து தனிச் சிந்தனையே. ஓடி என்னைப்பின்தள்ளாதே களைத்தெனைத் தாமதிக்காதே, கூடி நட, வெல்வது நானில்லை நாம்” என்று தெரிவித்து இருந்தார்.

கமலின் இந்த டிவிட்டர் படித்து கொண்டிருந்தபோது, மற்றொரு டிவிட் செய்திருந்தார். அதில், ‘‘புரிந்தவர் புரியாதோர்க்குப் புகட்டுக. நாட்டிற்கு ஊழியம் செய்வோரை கேலி செய்யாதே. மூப்பெய்தி மாளும் முன். சுதந்திரம் பழகு. தேசியமும் தான்” என்று கூறியிருந்தார்.

Most Read