இந்தியா
Typography

தொகுதி கோரிக்கையை முன்வைத்து, அதிமுக சட்டசபை உறுப்பினர் தங்க தமிழ்ச் செல்வன், இன்று சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார்.

தினகரன் கோஷ்டி ஆதரவு சட்டசபை உறுப்பினரான இவர், எடப்பாடி அரசை கண்டித்து இவ்வாறு வெளியேறியிருப்பது  அதிமுக உட்கட்சி கோஷ்டி மோதலின் உச்சத்தை காண்பிப்பதாக அரசியல் விமர்சர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இது வெறும் தொடக்கம் தான்.  அதிமுக அரசி எங்கள் வழிக்கு வரும் வரை எங்கள் போராட்டம் தொடரும், குடைச்சல் தொடரும் என்கின்றார் அண்மையில் ஜாமினில் வெளியில் வந்த தினகரன்.

தேர்தல் ஆணையகத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் தீஹார் சிறைவாசம் அனுபவித்த தினகரன், ஜாமினில் அண்மையில் வெளியில் வந்திருந்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்