இந்தியா
Typography

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று கேரள மாநிலத் தலைநகர் கொச்சியில் மெட்ரோ ரயில் நிலையத்தை திறந்து வைத்தார். அதோடு பளாரிவட்டத்திலிருந்து, பாதடிப்பளம் வரை, கேரள ஆளுனர், முதல்வர், யூனியன் மினிஸ்டர் ஆகியோருடன் பயணமும் மேற்கொண்டார்.

இந்தியாவில் மிக வேகமாக தொடங்கி முடிக்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டமாக கொச்சி மெட்ரோ புகழ்பெற்றுள்ளது.  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களினால் 2012 செப்டெம்பர் மாதம் தொடக்கி வைக்கப்பட்ட இம்மெட்ரோ ரயில் திட்டம் சுமார் 5,181 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டு வந்தது. கொச்சியின் உள்ளூர் போக்குவரத்தை மேம்படுத்தி வாகன நெரிசடியை கட்டுப்படுத்தும் விதமாக இது உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read