இந்தியா
Typography

காஷ்மீரில், பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு வாழ்வாதாரம் அளித்து வருவதாக இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் 35வது அமர்வில் பாகிஸ்தானின் அறிக்கைக்கு பதிலளித்துள்ள இந்தியா, பாகிஸ்தான் காஷ்மீரில் ஸ்திரமின்மையை ஏற்படுத்த பயங்கரவாதத்தை பயன்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் தன்னுடைய அரசியல் நோக்கத்திற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தை மீண்டும் ஒருமுறை பயன்படுத்த முயற்சி செய்து உள்ளது எனவும் இந்தியா சாடியுள்ளது.

“இந்தியாவின் மாநிலமான ஜம்மு காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் வேண்டப்படாத மற்றும் தேவையில்லாத கருத்துக்களை தெரிவித்து உள்ளது. பாகிஸ்தானின் பேச்சு உண்மையற்றது. காஷ்மீர் குறித்து பேச பாகிஸ்தானுக்கு எந்த ஒரு தொடர்பும் கிடையாது,” என இந்தியாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் ஸ்திரத்திற்கு சவாலாக இருப்பது பயங்கரவாதம் மட்டும்தான். அங்கு பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் வாழ்வாதாரம் அளிக்கிறது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 1267இன் படி பயங்கரவாத இயக்கங்கள் என அறிவிக்கப்பட்ட இயக்கங்கள் பாகிஸ்தானில் இன்றளவும் சுதந்திரமாக செயல்பட்டு வருகின்றன என்றும் இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்