இந்தியா
Typography

டெல்லி அரசு எடுக்கும் முடிவுகளுக்கு டெல்லி ஆளுநர் கட்டுப்படாத தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. 

டெல்லி மாநில ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்கு கட்டுப்பட வேண்டுமா, இல்லை மத்திய அரசு நியமித்ததால் மத்திய அரசின் முடிவுகளுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டுமா என்பன உள்ளிட்ட 9 மனுக்கள் டெல்லி அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கலாகி இருந்தன. அனைத்து மனுக்களையும் ஒன்றாக விசாரணைக்கு இன்று நீதிபதிகள் எடுத்துக்கொண்டனர்.

டெல்லி தனி மாநிலம் அல்ல என்றும், யூனியன் பிரதேசம் என்பதால், டெல்லி அரசின் எந்த முடிவுக்கும் டெல்லி துணை நிலை ஆளுநர் கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும், மாநிலத்தின் நலனுக்காக அவர் தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கலாம் என்றும் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS