இந்தியா
Typography

நாட்டைப் பாதுகாப்பதை விடுத்து அமீர்கானை மிரட்டுவது பாதுகாப்பு அமைச்சரின் பணியா என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு, நவம்பர் மாதம் நிகழ்ச்சி  ஒன்றில்,பேசிய அமீர்கான், நாட்டில் சகிப்பின்மை குறைந்துள்ளது என்றும், எனவே, இந்தியாவை விட்டு
வேறு நாட்டுக்கு சென்று வசிக்கலாமா என்று, தம்மிடம் தமது மனைவி குழந்தைகளின் பாதுகாப்பு கருதி அச்சத்துடன் கேட்டார் என்று அமீர்கான்
கூறி இருந்தார்.இது அப்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருந்தது. இந்நிலையில், புனேயில் மராட்டிய நூல் ஒன்றை வெளியிட்டு பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், ஒரு நடிகர் நாட்டில சகிப்பின்மை நிலவி வருவதால், வெளிநாட்டுக்கு சென்று வாசிக்கலாம் என்று
தமது மனைவி கேட்டதாக கூறியுள்ளார். நாட்டுக்கு எதிராக பேச அவருக்கு எவ்வளவு துணிச்சல் இருந்திருக்க வேண்டும். இவர் போன்ற நபர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று மனோகர் பாரிக்கர் கூறினார்.

இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் போன்ற நாடுகளிடமிருந்து இந்தியாவை காப்பாற்றுவது பாதுகாப்பு அமைச்சரின் பணியா அல்லது, தனி நபரை பழிவாங்கும் வகையில் அறிக்கை விடுவது பாதுகாப்பபு அமைச்சரின் பணியா என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்