இந்தியா
Typography

மத்திய மாநில அரசுகள் தங்களது படகுகளை மீட்டுத் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்து நடத்திய கால வரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை ராமேஸ்வரம் மீனவர்கள் கைவிட்டனர். 

தமிழக மீனவர்களின் 70க்கும் மேற்பட்ட விசைப் படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைப் பிடித்து வைத்துள்ளனர். கடந்த ஒரு வருடங்களுக்கும் மேலாக இந்த படகுகளை மீட்டுத் தர வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், எந்த ஒரு முடிவும் மத்திய மாநில அரசுகள் இதுக் குறித்து அறிவிக்காத நிலையில், கடந்த சில தினங்களாக கால வரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை ராமேஸ்வரம் மீனவர்கள் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், ராமேஸ்வரம் மீனவர்களின் சிறப்பு பிரதிநிதிகள் உட்பட தமிழகத்தை அனைத்து மாவட்ட மீனவர்கள் தரப்பு பிரதிநிதிகளும், டெல்லியில் இன்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட அமைச்சர்களை சந்தித்தனர். அப்போது தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டுத் தருவதாக மத்திய அமைச்சர்கள் மற்றும் தமிழக  மீனவர்களின் சந்திப்பு கூட்டத்தில் அமைச்சர்கள் உறுதியளித்ததன் பேரில் ராமேசுவரம் மீனவர்கள் இருந்து வந்த காலைவரையற்ற வேலை நிறுத்தத்தை இன்று வாபஸ் பெற்றனர். வேலைநிறுத்தப் போராட்டத்தை விலக்கிக் கொண்டு, ஆகஸ்ட் 3-ஆம் திகதி முதல் மீன்பிடிக்க கடலுக்கு செல்வது மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.என்று தெரிய வருகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்