இந்தியா
Typography

“காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு வேளாண் மண்டலமாக முதல்வர் அறிவித்தது யாரை ஏமாற்ற? காவிரி டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவிக்க மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும்.” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மதுரவாயலில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

திமுக தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மத்திய அரசு தான் அறிவிக்க வேண்டும். ஏற்கனவே காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களின் நிலை என்ன? தமிழகத்தில் ஏற்கனவே இருக்கும் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை மூட மத்திய அரசு அனுமதி தந்துவிட்டதா?

காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு வேளாண் மண்டலமாக முதல்வர் அறிவித்தது யாரை ஏமாற்ற? காவிரி டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவிக்க மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவிப்பது பற்றி மக்களவையில் டி.ஆர்.பாலு எழுப்பிய கேள்விக்கு அரசு பதிலளிக்கவில்லை. காவிரி பாயும் மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவிப்பது குறித்த ரகசிய கடிதத்தை டெல்லிக்கு சென்று கொடுத்துள்ளார் ஜெயக்குமார். சிறப்பு வேளாண் மண்டல அறிவிப்பு தொடர்பாக தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் கேள்வி எழுப்புவோம்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் சீர்திருத்த திருமணங்களுக்கு அங்கீகாரம் கிடைத்தது. உள்ளாட்சி, எம்.பி. தேர்தல் தோல்வி காரணமாக வேளாண் மண்டல அறிவிப்பை முதல்வர் வெளியிடுகிறார். தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சூழல் விரைவில் வரும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்