இந்தியா
Typography

எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட 48 மணி நேரத்தில் இணையத் தளத்தில் அறிக்கையைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று, உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

காவல் நிலையத்தில் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டு, எஃப்ஐஆர் எனப்படும் முதல் தகவல் அறிக்கைத் தயாரான நிலையில், அதை அடுத்த 48 மணி நேரத்துக்குள் அந்த காவல் நிலையத்துடன் தொடர்புடைய இணையத் தளத்தில் பதிவேற்றம் செய்துவிட வேண்டும். மிக முக்கியமான வழக்குகள் என்றால் 72 மணி நேரம் கால அவகாசம் எடுத்துக்கொள்ளலாம்.

பயங்கரவாதம், குழந்தை கடத்தல், பாலியல் வன்கொடுமை போன்ற வழக்குகளுக்கு இந்தத் தீர்ப்பு செல்லாது என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS