இந்தியா
Typography

பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதில் ஆந்திரா அரசு மும்முரம் காண்பித்து வருகிறது. 

பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றதில் இருந்து டிஜிட்டல் இந்தியா, தூய்மை இந்தியா என்று பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தினார். புதுவையில் தூய்மை இந்தியாத் திட்டத்தை அமல்படுத்துவதில் அம்மாநில ஆளுநர் கிரண்பேடி தீவிரமாக களம் இறங்கியுள்ளார். இதே போன்று ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு, டிஜிட்டல் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.  

இதன் முதற்கட்டமாக முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், ‘‘டிஜிட்டல் திட்டத்தின் ஒரு பகுதியாக கல்லூரி மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்குவது கொள்கை அளவில் முடிவு செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS