இந்தியா
Typography

காவிரி நதிநீர் பிரச்னைக்கு நதிகளை இணைப்பது ஒன்றே சிறந்த வழி என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். 

விஜயகாந்த் காவிரி நதிநீர் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வருடா வருடம் இந்த நேரத்தில் தமிழக விவசாயிகளுக்கு நியாயம் கிடைப்பதில்லை என்று தெரிவித்துள்ளார். கர்நாடக அரசு, தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிடுவதில் வருடாவருடம் இழுபறி நீடித்து வருகிறது.  

இதற்கு ஒரே தீர்வு என்றால், தேசிய அளவில் நதிகளை இணைப்பது ஒன்றுதான் என்றும், முதலில் தென்னக நதிகளையாவது இணைக்க மத்திய மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கோரிக்கை வைத்துள்ளார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்