இந்தியா
Typography

தமிழகத்தில் ஜிகா வைரஸ் தொற்று வராமல் தடுக்கும் நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று, சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார். 

சிங்கப்பூரில் உள்ள இந்தியர்களுக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பதை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இதையடுத்து, சிங்கப்பூரில் இருந்து தமிழகத்துக்கு வரும் விமானங்களில் ஜிகா வைரஸ் தடுப்பு மருந்துகள் அடிக்கப்பட்டு வருகின்றன என்றும், பயணிகளின் உடைகளிலும் இந்த தடுப்பு மருந்துகள் அடிக்கப்பட்டு அவர்கள் விமானத்தில் ஏற்றப்படுகின்றனர்  என்றும் ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.  

இதே போன்று சென்னை விமான நிலையத்திலும் பயணிகள் சோதனைக்குப் பின்னரே, தடுப்பு மருந்துகள் அடிக்கப்பட்டு, அனுமதிக்கப்படுகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். அதோடு, தமிழகத்தில் டெங்கு குறித்து அச்சம் தேவையில்லை என்றும், மொத்தம் 125 நாடுகளில் டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு உள்ளது என்றும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மிகவும் கட்டுக்குள் உள்ளது என்றும் ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்