இந்தியா
Typography

ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் முன்னறிவிப்பின்றி விடுப்பு எடுத்த விமானியைப் பணி நீக்கம் செய்து அதிரடி முடிவெடுத்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்ட ஒரு விமானியை ஏர் இந்தியா விமானநிறுவனம் பணி நீக்கம் செய்தது. இந்நிலையில், கடந்த ஞாயிறு அன்று ஒரு விமானி, முன்னறிவிப்பின்றி விடுப்பு எடுத்திருந்தார். அதோடு, 15 விமானிகள் தாமதமாக பணிக்கு வந்துள்ளனர். இதனால் அனைத்து ஏர் இந்தியா விமானங்களும் அரை மணி மற்றும் ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுள்ளது என்று பயணிகள் தரப்பிலிருந்து கடுமையான புகார்கள் குவிந்தன.

இந்த புகார்களை அடுத்துதான், விமானிகள் தாமதமாக பணிக்கு வந்தது, ஒரு விமானி சொல்லாமல் விடுப்பு எடுத்துக்கொண்டது எல்லாம் அதிகாரிகளுக்குத் தெரியவந்தது என்று தெரிகிறது. இதையடுத்து, விடுப்பு எடுத்துக்கொண்ட விமானியின் பணி பறிக்கப்பட்டது.தாமதமாக பணிக்கு வந்த 15 விமானிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது என்று தகவல்கள் தெரிய வருகின்றன.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்