இந்தியா
Typography

பதவி நீக்கம் செய்யட்டும் நானாக விலக மாட்டேன் என்று அருணாச்சல பிரதேச ஆளுநர் ஜோதி ராஜ்கோவா திட்டவட்டமாத தெரிவித்துள்ளார்.

அருணாச்சல பிரதேச ஆளுநராக உள்ள ஜோதி ராஜ்கோவாவை பதவி விலகும் படி மத்திய அரசு நிர்பந்திப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்தத் தகவலையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், குடியரசுத்தலைவர் மட்டும்தான் தன்னை பதவியில் இருந்து நீக்க முடியும் என்றும், தானாக பதவி விலக மாட்டேன் என்றும் தெரிவித்தார்.

அருணாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை இடைநீக்கம் செய்த விவகாரத்தில், ஜோதி பிரசாத் ராஜ்கோவா உச்ச நீதிமன்றத்தால் கண்டனத்திற்கு ஆளானார்.தற்போது உடல்நலக்குறைவு காரணமாக விடுப்பில் உள்ள அவரை, பதவி விலகும்படி மத்திய அரசு கூறியதாக வெளியான தகவல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவ்வாறு தன்னை பதவியில் இருந்து நீக்க மத்திய அரசு விரும்பினால், பிரதமரும், அமைச்சரவையும் குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்யட்டும் என்று கூறியுள்ளார் இவர்.இந்நிலையில்தான் தாம் உடல் நலம் தேறிவிட்டதாகவும், விரைவில் அலுவல்களை தொடர உள்ளதாகவும் கூறியுள்ளார்.அருணாச்சல பிரதேஷில் காங்கிரஸ் ஆட்சி இடைநீக்கம் செய்யப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்ததும், பின்னர் உச்ச நீதிமன்றத்தை நாடிய மாநில  காங்கிரஸ் பின்னர் நீதிமன்றத்தின் உத்தரவோடு ஆட்சியைப் பிடிதத்தும் இவ்வேளையில் குறிப்பிடத்  தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்