இந்தியா
Typography

இந்தியாவிற்கான 2019ம் ஆண்டு ஜனநாயகக் குறியீடு பின்னடைந்திருப்பது அபாயரமானது, அச்சந் தருவருவது என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடைமுறை, பன்முகத்தன்மை, அரசின் செயல்பாடு, அரசியல் கலாசாரம், குடிமக்கள் உரிமைகள் உள்ளடங்கிய ஐந்து முக்கிய விடயங்களை முன்வைத்து, சர்வதேச ஜனநாயக தரக் குறியீடு பட்டியலை " தி எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட்" தயாரித்து வெளியிடுகிறது.

உலக நாடுகளின் ஜனநாயக நிலை குறித்த தரவரிசையில் இந்தியா, 2019 ம் ஆண்டில் 51வது பின்னடைந்துள்ளது. இது அதற்கு முன்னைய இடத்திலிருந்து 10 இடங்கள் பின்னோக்கித் தள்ளப்பட்டுள்ளதாகவும், இது நாட்டின் ஜனநாய நிலை குறித்த அச்சத்தையும், ஜனநாயக நிறுவனங்கள் பலவீனமடைந்துள்ளன என்பதையும் வெளிப்படுத்துவதாக, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக எம்.பி.கனிமொழி தனது டுவிட்டர் பதிவில்; உலக ஜனநாயக குறியீட்டில், இந்தியா ஒரே ஆண்டில் பத்து இடங்கள் கீழிறங்கியிருப்பது, இந்தியாவில் உரிமைகள் எப்படி பறிக்கப்பட்டு வருகின்றன என்பதையும், ஒரு பாசிச நாடாக மாற்றப்பட்டு வருகிறது என்பதையும் சுட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்