இந்தியா
Typography

புதுடெல்லி ஜனாதிபதி மாளிகையில் 2019 தேசிய வீரதீர செயல் விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு, இந்த வருடத்திற்கான விருதுகளை 12 சிறுவர்கள் மற்றும் 10 சிறுமிகள் என மொத்தம் 22 பேர்களுக்கு வழங்கிக் கௌரவித்தார்.

இதில் தீரச் செயல் புரிந்த ஒரு சிறுவனுக்காக விருது அவரது மரணத்தின் பின்னதாக வழங்கப்பெற்றது. கோழிக்கோட்டிலிருந்து, முஹம்மது முஹ்சின் தனது மூன்று நண்பர்களை ஆழ்கடலில் மூழ்கவிடாமல் காப்பாற்றுவதற்காக தனது உயிரைப் பணயம் வைத்தார். நண்பர்கள் தப்பிப்பிழைத்தனர், ஆனால் அவர்களின் மீட்பரான முஹ்சின் இறந்தார்.

முஷினின் குடும்பத்தினர் கண்ணீரையும் உணர்ச்சிகளையும் அடக்கியவாறு, தங்கள் மகனுக்கான அபிமன்யு விருதினைப் பெற்றுக் கொண்டார்கள். உணர்ச்சிவசப்பட்ட நிலையிருந்த அவரது தந்தை, "என் குழந்தை ஒரு துணிச்சலான மரணம் அடைந்தார். இந்த விருதினை அவரைப் போன்ற அனைத்து தைரியமான குழந்தைகளுக்கும் சமர்ப்பின்றேன் " என்றார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்