இந்தியா
Typography

ஆந்திரா மாதநிலத்தின் பன்முக வளர்ச்சித்திட்டத்திற்காக, அமராவதி, விசாகப்பட்டினம், கர்னூல், ஆகிய மூன்று நகரங்களையும், நிர்வாக நகரங்களாக ஜெகன் மோகன் ரெட்டி அரசு அறிவித்தது. இந்த மூன்று தலைநகரங்கள் முடிவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

அமைச்சரவை ஒப்புதல் கிடைத்ததைத் தொடர்ந்து, அமராவதி சட்டப்பேரவை தலைநகராகவும், விசாகப்பட்டிணம் நிர்வாக தலைநகராகவும், கர்னூல் நீதித்துறை தலைநகராகவும் அமைப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

சட்டப்பேரவையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்குப் பெருபாண்மை உள்ளதால் இந்த மசோதா இலகுவாக நிறைவேற்றப் பெற்றாலும், ஆந்திர சட்டமேலவையில், பலமற்றிருக்கும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தீர்மானத்தை, எதிர்க்கட்சிகளின் ஆதரவு கிடைக்குமா என்பது கேள்விக்குரியதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்